மார்பகத்தை பெரிதாக்க போடும் ஹார்மோன் ஊசியால் ஏற்படும் பிரச்சனைகள்...
- ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
- ஈஸ்ட்ரோஜன் சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம்.
பெண்களுள் சிலர் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க கஷ்டப்பட்டாலும், சிலர் அதன் அளவை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக சில பெண்கள் சர்ஜரி செய்யவும் நினைக்கின்றனர்.
மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம்.
பெண் குழந்தைகள் பருவம் அடையும்போது, ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக பத்து வயதில் தொடங்கி பதினான்கு வயது வரை நீடிக்கும். இந்த மாற்றங்கள் எட்டு வயதிற்கு முன்பாகவோ அல்லது பத்து வயதுக்கு முன் மாதவிடாய் ஏற்படுவதாகவோ தோன்றினால், அது "முன்கூட்டிய பருவமடைதல்" எனப்படும்.
பொதுவாக, உடல் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதற்காக மருத்துவர்கள் எவ்வித மருந்துகளையும் தருவதில்லை. ஈஸ்ட்ரோஜன் (பெண் பாலின ஹார்மோன்) சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
மார்பகங்களில் வலி, உடல் முழுவதிலும் வலி, மாதாந்திர ரத்தப்போக்கு போன்ற தற்காலிக பிரச்னைகள் மற்றும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்படலாம்.
மார்பக வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஈஸ்ட்ரோஜனை செயற்கையாகச் செலுத்தினால், அது வளர்ச்சியை நிறுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது சில நேரங்களில் பெண்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயுடன் சேர்ந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்னைகளும் ஏற்படலாம்.
அதனால்தான், மருத்துவர்கள் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, ஆபத்துகள் குறித்துத் தெரிவித்த பின்னரே இந்த சிகிச்சைகளை தொடங்குகின்றனர்.
உடல் எடை, கொழுப்பை அதிகரிக்க இன்சுலின், கார்டிசோல் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அவை எலும்புகள் பலமிழப்பது, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
பிற பிரச்னைகளுக்கான சிகிச்சையாக இவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகவும் பலரும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, கட்டாயம் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு தேவையான நாட்களுக்கு, தேவையான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஈஸ்ட்ரோஜனை கொடுப்பதற்கு முன் பரிசோதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்ணின் தாய் அல்லது ரத்த உறவினர்கள் யாருக்கும் மார்பக அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஹார்மோன்கள் கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். அழகுக்கான சில அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு, அவற்றை செயற்கையாகப் பெறுவதற்கு தேவையில்லாமல் இதுபோன்ற முறைகளைக் கையாண்டால், ஆரோக்கியம் கெட்டு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகலாம்.
மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிம்பிளான பல இயற்கை வழிகள் இருக்க, ஏன் சர்ஜரிக்கு செல்ல வேண்டும்.
மார்பகங்களின் அளவை பெரிதாக்க தினமும் தவறாமல் மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.
மார்பக தசைகளை மையமாக கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் அனைத்தும் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.