கோடை வெயிலில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க...
- சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும்.
- குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
கோடை வெயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதிக வெப்பநிலை, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படும். எனவே கோடை வெயிலில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்:
* அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் என்று காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
* இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும். விருப்பப்படும் பழங்களை சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* காலை 10 மணி முதல் மாலை 4 மணி வெயில் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் குடை பயன்படுத்தலாம். கருப்பு நிற குடையை தவிர்க்க வேண்டும்.
* குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
* உணவுகளை 5 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். காரமான, புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் உண்ண வேண்டும்.
* தூக்கம் வரும் நேரத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூங்குவதால் மன அழுத்தம் குறையும்.