எடப்பாடி அணிக்கு ‘இரட்டை இலை’ சென்றால் அழிந்து விடும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
சென்னை:
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக இன்று முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு ஆதரவாக இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். ஆவணங்களை சரி பார்த்து இன்றே முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் அழிந்து விடும்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி தேவை என்று சொன்னவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். அ.தி.மு. க.வை அழித்து விட்டு வளர நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது.
மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமான வரித்துறைக்கு பயப்படுகிறார்கள். தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை என்று மக்கள் பேசுகின்றனர்.
பொதுக்குழு உறுப்பினர்களில் சிலர் இரு தரப்பு பிரமாண பத்திரங்களிலும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.