இந்தியா

அதிகரித்த காற்று மாசு: பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு

Published On 2024-11-17 17:25 GMT   |   Update On 2024-11-17 17:25 GMT
  • அத்தியாவசிய வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
  • அரசு, மாநகராட்சி, தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு தொடர்ந்து அபாயகரமான நிலையிலேயே உள்ளது. இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை ஆரம்ப பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டார். இதனால் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

அரசு, மாநகராட்சி, தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News