உள்ளூர் செய்திகள்

வீட்டின் மாடியில் வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து

Published On 2022-07-31 09:33 GMT   |   Update On 2022-07-31 09:33 GMT
  • தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

வாலாஜா சுப்புராய தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் கீழ் புதுப்பேட்டையில் 15 ஆண்டுகளாக பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

இவரது சகோதரர் தரணி (48). குமாரின் பட்டாசு கடையில் தரணி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து தெருவில் நடைபெறும் திருவிழாவிற்காக கடையில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து தரணியின் மாடி வீட்டில் வைத்திருந்தார்.

இன்று காலை மாடியில் பட்டாசு வைத்திருப்பதை பார்த்த தரணியின் மகன் நிர்மல் (20) பட்டாசுகளை ஏன் மாடியில் வைத்துள்ளார்கள் என தந்தையிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நிர்மல் மாடியில் இருந்த பட்டாசுக்கு தீ வைத்தார். பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் நிர்மலுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் மாடியில் சுற்றுச்சுவர் இடிந்த்து விழுந்தது. பட்டாசு வெடிக்கும் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், நகர மன்ற தலைவர் ஹரிணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News