உள்ளூர் செய்திகள்
மணல் கொள்ளையில் ஈடுபட்ட 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலுள்ள மலட்டு ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை நடக்கிறது.
- போலீசார் 6 மாட்டு வண்டிகளையும் காந்தி குப்பம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப்பிடித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலுள்ள மலட்டு ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை போவதாக விழுப்புரம் மாவட்ட போலீ ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் எஸ்பி தனிப்படபடை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுப்பாளையம் ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 6 மாட்டு வண்டிகளையும் காந்தி குப்பம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப்பிடித்தனர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர் 10 மாட்டு வண்டிகளையும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து 10 மாட்டு வண்டி உரிமையாளரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.