தியாகதுருகம் அருகே தொடர் மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள்
- கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர்.
- கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், கலை பறித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல் அறுவடை செய்யாமலே நெல்மணிகள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி யைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கருப்பகவுண்டர் கூறியதாவது:-
கூத்தக்குடியில் ஒரு சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும் பல விவசாயி கள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிர் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டது. இனி அறுவடை செய்தால் அறுவடை கூலிக்குகூட பணம் கிடைக்காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே தொடர் மழையால் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு கூறியதாவது:- மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத் தலின்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நெற்பயிர் சேதமடைந்த விவசாயிகளின் விவரங்க ளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தொடர் மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் நின்ற வாறு ஒரு புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் நகல் ஆகியவற்றுடன் விவசாயிகள் நிவாரண மனுவை இணைத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலரும் தங்களது நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களை அந்தந்த பருவங்களில் பயிர் காப்பீடு செய்து வருகின்ற னர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒவ்வொரு பயி ருக்கும் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படை யில் பயிர்களுக்கு ஏற்ற வாறும், பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இதில் அந்த குறிப்பிட்ட பகுதியில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயி கள் மற்றும் பயிர் பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கும் சில சமயங்களில் பயிர் சாகுபடி செய்யாத விவசாயி களுக்கும் இழப்பீடு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே வரும் காலங்களில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் விதத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என விவசாயிகள் பலரும் கூறு கின்றனர்.