உள்ளூர் செய்திகள்

சிவகிரி பேரூராட்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2023-11-01 08:42 GMT   |   Update On 2023-11-01 08:42 GMT
  • உணவகங்கள், கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
  • சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு, சப் இன்ஸ்பெக்டர் சஜிவ் ஆகியோர் தலைமையில், அனைத்து உணவகங்களிலும், கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 100 கிலோ பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின் ராஜாசிங், சுகாதார மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News