உள்ளூர் செய்திகள்

வரி வசூலை 100 சதவீதம் செய்து முடிக்க வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

Published On 2023-01-21 05:12 GMT   |   Update On 2023-01-21 05:12 GMT
  • கமிஷனர் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.
  • உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி விதிப்புகள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி கூட்டரங்கில் கமிஷனர் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள், வருவாய் பிரிவினர் கலந்து கொண்டனர்.

இதில் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரியினங்கள், குத்தகை, வாடகை, உரிமக் கட்டணம் உள்ளிட்ட வருவாய் இனங்கள் வசூல் பணி, நிலுவையில் உள்ள வரியினங்கள் விவரம், புதிய சொத்து வரி விதிப்பு பதிவேற்றம் செய்யும் பணி ஆகியன குறித்து விரிவாக ஆய்வு நடத்தி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மாநகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரியினங்களை வசூலிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். நிலுவையில் உள்ள வரியினங்களை இம்மாத இறுதிக்குள் 70 சதவீதம் வரையும், மார்ச் 31ந் தேதிக்குள் 100 சதவீதமும் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டண நிலுவை உள்ள கட்டடங்களில் இணைப்பு துண்டிக்க வேண்டும். தொழில்வரி வகையில் உரிய மாற்றம் செய்து வசூலிக்க வேண்டும். தொழில் வரி வசூல் குறித்து உரிய அலுவலகங்களுக்கு தகவல் அளித்து முழுமையாக வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.

தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாநகராட்சி பகுதியில் தொழில் வரி விதிப்பு குறைவாக உள்ளது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட புதிய சொத்து வரி விதிப்புகள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது 

Tags:    

Similar News