உள்ளூர் செய்திகள்

நீட் எதிர்ப்பு கையெழுத்திட்ட அட்டைகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கிய போது எடுத்த படம்.

தி.மு.க. சிறுபான்மை உரிமை நல அணி சார்பில் நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற 1,000 அட்டைகள்-ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்

Published On 2023-11-22 08:21 GMT   |   Update On 2023-11-22 08:21 GMT
  • நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
  • கையெழுத்து இயக்கத்தை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சங்கரன்கோவில்:

மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார்.

தென்காசி வடக்கு மாவட்ட சிறுபான்மை உரிமை நல அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான ஆயுதம் கையெழுத்திட்ட அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட அமைப்பா ளர் நாகூர் கனி, மாவட்ட தலைவர் மரியலூஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற 1,000 அட்டைகளை சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.

தொடர்ந்து தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக கையெழுத்து இயக்கத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாபன், நகர செயலாளர் பிரகாஷ், சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட துணைத் தலைவர் ஞானையா எழிலன், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் பாதுஷா, அப்துல் காதர், திவான் அலி, பாண்டித்துரை, மைதீன் கனி, அப்துல் ஜாபர், மாவட்ட விளையாட்டு மேம் பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் தொ.மு.ச. மகாராஜன், கேபிள் கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News