உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் செந்தில்நாதன்,பள்ளி முதல்வர் முத்துகண்மணி பாராட்டிய காட்சி. 

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : திருப்பூர் காந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-21 07:43 GMT   |   Update On 2022-06-21 07:43 GMT
  • 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.
  • சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் செந்தில்நாதன், பள்ளி முதல்வர் முத்துகண்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் பாரதிநகர் தமிழ்நாடு சர்வோதயா சங்கம் காந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10மற்றும் 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.இந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இதில் 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி அனுபிரபா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி ஸ்ரீநிதி 590 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவர் பிரேம் 588 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி கமலேஸ்வரி 500க்கு 478 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தீட்சிகா 474 மதிப்பெண் பெற்று 2-ம் இடம், கிருபாஸ்ரீ473 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் செந்தில்நாதன்,பள்ளி முதல்வர் முத்துகண்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.   

Tags:    

Similar News