உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்த 1200 டன் யூரியா
- விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.
- 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையால் 87ஆயிரம் ஏக்கரில் விவசாயம் சேதம் அடைந்துள்ளது, மீதமுள்ள விவசாயத்தை காப்பாற்றுவதற்குத் தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து யூரியா வரவழைக்கப்பட்டது.
1268டன் யூரியா சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறை ரயில்நிலையத்திற்கு வந்தது, அவற்றை 74 லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். யூரியா வந்ததை மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இறக்கப்பட்டது.