உள்ளூர் செய்திகள் (District)

குரூப் 2, 2-ஏ தேர்வை 125 பேர் எழுதவில்லை

Published On 2023-02-26 09:39 GMT   |   Update On 2023-02-26 09:39 GMT
  • 9 தேர்வுகூட காவலர்கள் என மொத்தம் 44 நபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
  • 125 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாடு அரசுப்ப ணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் -11 இடம், நன்னடத்தை அலுவலர்கள் -2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் -19, சார் பதிவாளர் (கிரேடு 2) 17, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி) -8, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு உதவியாளர் -1, காவல் ஆணையரகம் நுண்ணறிவு பிரிவில் தனி பிரிவு உதவியாளர் -15,

குற்றப்புலனாய்வு துறை சிறப்பு பிரிவில் தனிப்பிரிவு உதவியாளர் -43 இடங்கள், குரூப் 2ஏ (நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் நகராட்சி ஆணையர் (கிரேடு 2)-9 இடம், தலைமை செயலகம் உதவி பிரிவு அலுவலர் -11, முதுநிலை ஆய்வாளர் -291, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் -972 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21-ந் தேதி நடந்தது. முதல் நிலை தேர்வுக்கான முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி வெளியானது. அதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான மெயின் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த இந்த தேர்வினை கண்காணிக்க 9 முதன்மை கண்காணிப்பாளர்களும், 1 பறக்கும்படை, 3 நடமாடும் அலகு, 9 ஆய்வு அலுவலர்கள், 10 வீடியோ கிராபர்கள், 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள், 9 தேர்வுகூட காவலர்கள் என மொத்தம் 44 நபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் தேர்வ ர்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அனைதது அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் இந்த தேர்வினை எழுத 1687 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1562 நபர்கள் தேர்வு எழுதினர். 125 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், தாசில்தார் சம்பத்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News