உள்ளூர் செய்திகள்

 காரைக்கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில்  130 பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

காரைக்காலில் நகராட்சி சார்பில் 130 பன்றிகள் பிடித்து அகற்றப்பட்டது

Published On 2023-05-11 07:49 GMT   |   Update On 2023-05-11 07:49 GMT
  • விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் பன்றிகள் அதிக அளவு புகுந்து விளை நிலங்களை பாழ்படுத்தி வருவதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
  • மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த மாதம் வேளாண்குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய பல்வேறு  என கூறினர்.அதன்பேரில், காரைக் கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், காரைக் கால் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உத்தர விட்டார். அதன் பேரில், காரைக்கால் நகராட்சி சார்பில், பன்றி பிடிப்ப வர்கள் வரவழைக்கப்பட்டு, காரைக்கால் கீழகாசாகுடி, தலத்தெரு, அம்மன் கோ வில்பத்து, கருளாச்சேரி, அக்கரை வட்டம், ஓடுதுறை, நேருநகர், தருமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக 130 பன்றிகள் பிடிகப்பட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. இது குறித்து, கலெக்டர் குலோத்துங்கன் கூறுகை யில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக உள்ள பன்றிகள் தற்போது நகராட்சி சார்பில் கபிடிக்கபட்டு வருகிறது. இப்பணி இனி ஒவ்வொரு மாதமும் இருமுறை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News