கீழப்பாவூரில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் தீ விபத்தில் சேதம்
- ஆலமரத்தின் அடிப்பகுதி தீ பிடித்து எரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
- ஆலமரத்தின் பெரிய கிளை அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் வடக்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அந்த வழியே சென்ற பொதுமக்கள் ஆலமரத்தின் அடிப்பகுதி புகையுடன் தீ பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரமேஷ்,போக்குவரத்து பாலசந்தர் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் மாடசாமி, சமுத்திரபாண்டி, குமார், சவரணகுமார் மற்றும் வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தால் ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்று அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கீழப்பாவூரில் பழமை வாய்ந்த ஆலமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.