ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 18 திருமணங்கள்
- சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறு வது வழக்கம். இன்று ஒரு நாளில் மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 18 திருமணங்கள் நடை பெற்றன.
- ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றதால் வாகனத்திலும் குவிந்த வண்ணம் இருந்தனர்.
ஆத்தூர்:
திருமணங்கள் சொர்க்கத் தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அந்த திருமணங்கள் தெய்வத்தின் சாட்சியாக கோவிலில் நடைபெறுவது வழக்கம். தமிழகம் முழுவதும் புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியதும் முதல் திருமண முகூர்த்த நாளான இன்று பல கோவில்களில் திருமணங்கள் நடைபெற்றன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறு வது வழக்கம். இன்று ஒரு நாளில் மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 18 திருமணங்கள் நடை பெற்றன.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் மண மகன்-மணமகள் கழுத்தில் மங்கள நாண் அணிவிக்க ஆர்வத்துடன் மணமக்களும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். மேலும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தார் உட்பட அனை வரும் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா கோலமாக காட்சி அளித்தது. கோவிலின் திரும்பிய திசை எங்கும் மணமக்கள் நிறைந்து காணப்பட்டனர். செண்டை மேளம், கெட்டி மேளம் உள்ளிட்ட மங்கல ஓசைகள் கோயில் வளாகத்தில் அதிரடியாக ஒலித்தன.
பின்னர் மணமக்கள் திருமண விழாவை முடித்து கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கள் இல்லங்களுக்கு சென்றனர். ஒரே நாளில் 18 திருமணங்கள் நடைபெற்றதால் வாகனத்திலும் குவிந்த வண்ணம் இருந்தனர்.