உள்ளூர் செய்திகள்

ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட கொள்ளையர் களை படத்தில் காணலாம்.

ரெயில் பயணிகளிடம் நகை, செல்போன், பணம் பறித்த கஞ்சா வியாபாரி உட்பட 2 பேர் கைது

Published On 2023-10-29 07:59 GMT   |   Update On 2023-10-29 07:59 GMT
  • பயணி ஒருவரி டம் மொபைல் போன் மற்றும் பையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.
  • போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

விழுப்புரம்:

சென்னையில் இருந்து அனந்தபுரி ெரயில் கடந்த 17-ந் தேதி திண்டிவனம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பயணி ஒருவரி டம் மொபைல் போன் மற்றும் பையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார். அதே ெரயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகளி டம் கடந்த 19-ந் தேதி 28 பவுன் தங்க நகை, 3 செல்போ ன்கள் மற்றும் ரூ.3500 பறித்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் தப்பி சென்றார்.இது குறித்து திண்டிவனம் ெரயில்வே போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், மோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தேசி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் திண்டி வனம் கிடங்கல் - 1 பகுதி யைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி அஜய், அதே பகுதியை சேர்ந்த செல்வ மணி ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 17 பவுன் தங்க நகை, செல்போன்கள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News