உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்

Published On 2023-06-22 10:45 GMT   |   Update On 2023-06-22 10:45 GMT
  • திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
  • நன்கு காயவைத்து கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

திருவாரூர்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

அதிகபட்ச விலை நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News