கண்டாச்சிபுரம் அருகே ஏரி-கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் பலி
- ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
- எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36) ஆவார். இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் விவசாயக் கூலி வேலைக்கு சென்று இருந்தார். புளியந்தாங்கல் ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது அவர் திடீரென மயங்கி அருகில் இருந்த கிண ற்றில் விழுந்து விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து இறந்து போன ஏழுமலையின் பிரேதத்தை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து முண்டி யம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வமனை மருத்துவக் கல்லூரிக்கு ஏழுமலையின் பிரேதம் அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இறந்து போன ஏழுமலையின் மனைவி சுசிலா கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா வயது (40). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கு சென்று இருக்கிறார் அப்போது எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து இளையராஜாவின் அண்ணன் செந்தில்குமார் வயது 43 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.