காரைக்காலில் பஸ் டிரைவரிடம் நகை பறித்த 2 திருநங்கைகள் கைது
- மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை.
இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.