மேல் நாரியப்பனூர் திருவிழாவில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
- புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை 6 மணி அளவில் சென்றுள்ளார் .
- சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் அருண்குமார் (வயது 32 ) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மேல் நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை6 மணி அளவில் சென்றுள்ளார் . ராயப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருவிழாவிற்கு சென்று உள்ளார்.
பின்னர் மீண்டும் இரவு 11 மணி அளவில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தருமாறு அருண்குமார் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் குமரேசன் (வயது 29) பெருமாள் மகன் செந்தில்குமார் (வயது 39 )ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.