உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து 2005-ல் மாயமான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

Published On 2022-07-01 10:14 GMT   |   Update On 2022-07-01 13:51 GMT
  • கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.
  • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் உள்ளன. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால் என்பவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு பைபிள் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. இதையடுத்து பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.இந்த சூழ்நிலையில் லண்டனில் இந்த புதிய ஏற்பாடு பைபிள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் பைபிளை தமிழத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பைபிள் மீட்கப்பட்ட பிறகு பிறகு தஞ்சைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறித்து சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News