செய்திகள்

புதுவையில் விடிய, விடிய மழை

Published On 2016-06-23 06:40 GMT   |   Update On 2016-06-23 06:40 GMT
வடதமிழகத்தையொட்டி காற்று மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் புதுவையில் நேற்று இரவு மழை பெய்தது.

புதுச்சேரி:

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், 3 வாரங்களுக்கு மேலாக புதுவையில் கத்திரி வெயிலின் தாக்கம் நீடித்தது.  இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

அதற்கு ஆறுதல் அளிப்பது போல், கடந்த சில நாட்களாக புதுவையில் வெயில் குறைய தொடங்கியது. இடையில் 3 நாட்கள் லேசான மழையும் பெய்தது.

இந்த நிலையில் வடதமிழகத்தையொட்டி காற்று மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுவையில் நேற்று இரவு விட்டு, விட்டு மழை தூறியது.

இரவு 9 மணி அளவில் மீண்டும் பெய்ய தொடங்கிய தூறல் மழை, விடிய விடிய நீடித்தது. இந்த தொடர் மழையால் புதுவையில் நிலவி வந்த சீதோஷ்ண நிலை மாறி குளிர்ச்சி நிலவியது.

இன்று காலையிலும் மழை தூறி கொண்டேயிருந்தது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியதால் ரம்மியமாக இருந்தது.

Similar News