செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-12-01 06:52 GMT   |   Update On 2017-12-01 06:53 GMT
உளுந்தூர்பேட்டை அருகே இன்று காலை போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆண்டிக்குழி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன்(வயது 32). இவரது மனைவி கலாவதி(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 1 ஆண்டுகள் ஆகிறது.

சபரிநாதன் விழுப்புரம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று இரவு சபரிநாதன் பணிக்கு சென்றார். இன்று காலை அவர் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் ஒரு அறைக்கு தூங்கச்சென்றார். காலை 10 மணியளவில் அவரது மனைவி கலாவதி கணவர் படுத்திருந்த அறைக்கு சென்றார்.

அப்போது அங்கு சபரிநாதன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கலாவதி கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கிய சபரிநாதன் உடலை கீழே இறக்கினர்.

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News