செய்திகள்

கார்த்தி சிதம்பரம் வழக்கு: சி.பி.ஐ. - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2018-02-07 06:38 GMT   |   Update On 2018-02-07 06:38 GMT
கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை:

ஐ.என்.எக்ஸ். மீடியா அந்நிய முதலீடு பெற அனுமதி விவகாரத்தில் பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதுடன், அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.

இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் கோரிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யலாம் என கூறி வழக்கை சென்னைக்கு மாற்றியது.

இந்நிலையில், வரும் 14-ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளதால், அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், இதுபற்றி மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ. வரும் 12-ம் தேதி பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  #tamilnews

Similar News