செய்திகள்

காலாப்பட்டு கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சி பணி: கவர்னர் ஆய்வு

Published On 2018-06-02 13:40 GMT   |   Update On 2018-06-02 13:40 GMT
காலாப்பட்டு கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.
சேதராப்பட்டு:

புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.80 கோடி செலவில்  கடற்கரை மேலாண்மை திட்டத்தின்  கீழ் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  செய்து வருகிறார். 

அதுபோல காலாப்பட்டில் மத்திய அரசு மற்றும் புதுவை அரசு இணைந்து நடத்தும் அசோகா ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரையில்  சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்கா, நடைபாதை மற்றும் சுற்றுலா பயணிகள் சூரிய குளியல் செய்ய வசதி மற்றும் யோகா மையம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி இன்று காலை 6.40 மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது நடைபெற்று வரும் பணிகள், மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 

இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News