செய்திகள்
முதலியார்பேட்டை பகுதியில் 3 கோவில்களில் அடுத்தடுத்து உண்டியல் பணம் கொள்ளை
ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களிலும் உண்டியல் கொள்ளை நடந்திருப்பது முதலியார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை, முருங்கப்பாக்கத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
மாதந்தோறும் அமாவாசையின் போது, இந்த கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள். அவர்கள் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவார்கள். ஒவ்வொரு அமாவாசையின் பிறகு உண்டியலை திறந்து பணத்தை எண்ணுவது வழக்கம்.
கடந்த அமாவாசையின் போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை அவர் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது அங்கிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் அவர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது மேலும் 2 கோவில்களில் கொள்ளை நடந்து இருப்பது தெரிய வந்தது. முருங்கப்பாக்கம் என்.ஆர்.நகர் பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலும், முருங்கப்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோவிலிலும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருந்தது.
3 கோவில்களிலும் கொள்ளை யடித்தவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி. கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.