செய்திகள்

கோவை அருகே விபத்து: படுகாயம் அடைந்த கேரள வாலிபருக்கு வைகோ உதவி

Published On 2018-06-07 22:33 GMT   |   Update On 2018-06-07 22:33 GMT
கோவை அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கேரள வாலிபருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உதவி செய்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை:

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

7-ந்தேதி(நேற்று) பிற்பகல் 2 மணி அளவில், கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த இளைஞரை, அப்பகுதி வாழ் இளைஞர்கள், காரில் இருந்து வெளியே எடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டு வரவழைத்து, மனிதாபிமானத்துடன் செயல்பட்டனர்.

அதேநேரத்தில் அந்த வழியாக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கோவை மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்று வதற்கு உதவினர்.

அந்த இளைஞர் படுகாயம் அடைந்ததால், உடல் முழுவதும் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது.

கோவை அரசு மருத்துவமனை இயக்குனரிடம் வைகோ செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலை சொல்லி, அந்த இளைஞருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என இயக்குனர் தெரிவித்தார். இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News