செய்திகள்

பூரணாங்குப்பத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-06-14 10:40 GMT   |   Update On 2018-06-14 10:40 GMT
பூரணாங்குப்பத்தில் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்:

புதுவை பூரணாங்குப்பம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முகமதுஇலியாஸ். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெபின்தாஜ் (வயது40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜெபின்தாஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை முகமது இலியாஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகனும் பள்ளிக்கு சென்று விட்டார்.

அப்போது ஜெபின்தாஜிக்கு நோய் கொடுமை அதிகமாகவே மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் முன்பக்க கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது மகன் வீட்டின் கதவு தாழிட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தாய் ஜெபின்ராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News