செய்திகள்
தொப்பூர் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் குவிப்பு
தொப்பூர் அருகே மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி:
சேலம் அந்தோணிபுரத்தை சேர்ந்த குணசேகர் மனைவி கல்யாணி (வயது 32). இவரது தாயார் வீடு தருமபுரியை அடுத்த தொப்பூர் அருகே உள்ள பாகலஅள்ளி பகுதியில் உள்ளது. இங்கு கோவில் திருவிழா நடந்து வருவதால் கல்யாணி சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.
நேற்று மாலை கல்யாணி ஊருக்கு வெளியே உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அங்கு 5 வாலிபர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். பெண்கள் ஒதுங்கும் இந்த இடத்தில் மது அருந்துவதா என்று அவர் தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் 5 பேரும் சேர்ந்து கல்யாணியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்யாணியின் உறவினர்கள் திரண்டு வந்து அந்த வாலிபர்களை தாக்கினர். இது கோஷ்டி மோதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கல்யாணி கொடுத்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் (22), தர்மஅரசன் (25), சிலம்பரசன் (25), இன்னொரு சிலம்பரசன் (25), அரவிந்தன் (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் திராவிடமணி (32), சிரஞ்சீவி (31), சக்திவேல் (29), நாகேந்திரராஜ் (31) உள்பட 5 பேரை கைது செய்தனர். அசோக்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் இந்த கோஷ்டி மோதலில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews