செய்திகள்

நெட்டப்பாக்கம் பகுதியில் சூறைகாற்றில் 16 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

Published On 2018-08-02 08:17 GMT   |   Update On 2018-08-02 08:17 GMT
நெட்டப்பாக்கம் அருகே நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைகாற்று வீசியதில் 16 ஏக்கர் வாழை மரங்கள் சேதமானது.
சேதராப்பட்டு:

புதுவையில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைகாற்று வீசியது. இந்த சூறைகாற்றில் நெட்டப்பாக்கம், மடுகரை, கரியமாணிக்கம், கல்மண்டபம், சூரமங்கலம், பண்டசோழநல்லூர், வடகுப்பம், கரையாம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை, சவுக்கு, கரும்பு மற்றும் பப்பாளி, முருங்கை உள்ளிட்டவை சாய்ந்து சேதமாகி போனது.

குறிப்பாக குழை தள்ளிய வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து போனதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சுமார் 16 ஏக்கர் வாழை மரங்கள் சூறைகாற்றில் சாய்ந்து விட்டன.

இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வான விஜயவேணி வெங்கடேசன் சம்பவ இடங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சேதமடைந்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நஷ்டஈடு பெற்று தருவதாக விவசாயிகளிடம் விஜயவேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.

விஜவேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ.வுடன் வேளாண் கூடுதல் இயக்குனர் வேதாசலம், இணை இயக்குனர் சிவசங்கரன், வேளாண் அதிகாரி வெங்கடாச்சலம் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News