செய்திகள்

பட்டுக்கோட்டை பகுதி வாய்க்கால்களில் கலெக்டர்-எம்.எல்.ஏ.ஆய்வு

Published On 2018-08-09 13:34 GMT   |   Update On 2018-08-09 13:34 GMT
பட்டுக்கோட்டை பகுதி வாய்க்கால்களில் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை கடைமடை பகுதி விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய தண்ணீர் வரவில்லை என்பது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சி.வி. சேகரிடம் தெரிவித்தனர். 

இதுபற்றி அவர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் கூறியதை தொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை பட்டுக்கோட்டை தாலுகா காவிரி கடைமடை பகுதிகளான வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், கல்யாண ஓடைவாய்க்கால் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முருகானந்தம் மற்றும் கோட்டாச்சியர் பொதுப்பணிததுறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News