செய்திகள் (Tamil News)

அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு ஜெயில்

Published On 2018-08-11 18:03 GMT   |   Update On 2018-08-11 18:03 GMT
அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மதுரை:

மதுரை செக்கானூரணியை சேர்ந்தவர் விருமாண்டி (வயது 53). இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்திருந்தார்.

அந்த சமயத்தில் இவர் அதே பகுதியை சேர்ந்தவரும், அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவருமான பிரபாகரன் (42) என்பவரிடம் கடந்த 10.11.2017 அன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விருமாண்டி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகரனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குபதிவு செய்து விருமாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், விருமாண்டிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். 
Tags:    

Similar News