செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின், ராமதாஸ், ஜி.கே.வாசன் அறிக்கை
குட்கா ஊழலில் சி.பி.ஐ. சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று முக ஸ்டாலின், ராமதாஸ், ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளனர். #GutkhaScam #MinisterVijayabaskar #MKStalin
சென்னை:
குட்கா ஊழலில் சி.பி.ஐ. சோதனையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக தலைவர் முக ஸ்டாலின்:-
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் இல்லங்களிலும், சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன்.
குட்கா ஊழலை மறைக்க, அ.தி.மு.க.வின் மூன்று முதல்-அமைச்சர்களும், இரு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்றைக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, இப்போது அதிரடியாக 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தேதி வாரியாக குட்கா குடோன் அதிபரிடமிருந்து மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சர் விஜயபாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக, வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த டி.ஜி.பி. அசோக்குமாரை இரவோடு இரவாக பதவி விலக வைத்து, ஆட்சியினர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். அந்த கடிதத்தை காணாமல் அடித்த தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவை, வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள். பிறகு அந்த வருமான வரிக்கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று, தலைமைச் செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அவலம் அரங்கேறியது.
பிறகு நடைபெற்ற விசாரணையில் டி.ஜி.பி.க்கள் மற்றும் அமைச்சர் பெயரை சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடி உருவான போது, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனராக இருந்த மஞ்சுநாதா என்ற கூடுதல் டி.ஜி.பி.யை அங்கிருந்து தூக்கியடித்தார்கள்.
குட்கா ஊழல் புரிந்ததற்காக ரெய்டு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சரவையிலும், டி.கே. ராஜேந்திரன் புகழ்மிக்க தமிழக காவல்துறையின் தலைவராகவும் இனியும் நீடிப்பதும் ஒரு நிமிடம் நீடித்தாலும் அது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நேர்மை நியாயத்திற்கும், காவல்துறை நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழுக்காகவும், துடைக்க முடியாத கறையாகவும் அமைந்து விடும்.
ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்கள் பதவிகளை அவர்களாகவே முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்ய வில்லையென்றால் தமிழக ஆளுநர், அமைச்சர் விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமுமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வு தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. அரசியல் சட்ட அமைப்புகள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாளாவிருந்தால், சம்பந்தப்பட்டவர்களை சரித்திரம் மன்னிக்காது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகளை சட்ட விரோதமாக விற்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்கியது தொடர்பான வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
குட்கா ஊழலை மூடி மறைக்க சதி நடந்த நிலையில், அந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண நடத்தப்படும் இச்சோதனைகள் சரியான நடவடிக்கையாகும்.
தமிழக கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் இல்லாத நிலையில், அவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள சி.பி.ஐ. மறுத்து விட்டது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் புதிய வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
யார், யாருக்கெல்லாம் குட்கா ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு, முதற்கட்ட ஆதாரம் உள்ளவர்களின் வீடுகளில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று சி.பி.ஐ. சோதனைக்கு உள்ளானவர்கள் அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இனியும் தயங்காமல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தமிழக அரசு பதவி நீக்கம், பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
இன்றைக்கு மத்திய புலனாய்வுத்துறை குட்கா சம்பந்தமாக தமிழகத்தினுடைய சுகாதார அமைச்சரையும், தமிழக டி.ஜி.பி. யையும் அதோடு சந்தேகிக்கப்பட்ட 40 இடங்களில் சோதனை இடுவது, ஊழலுக்கான, தவறுக்கான ஆதாரத்தை நிருபிக்ககூடிய நிலையினை விரைவில் சி.பி.ஐ ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
ஏற்கனவே நடந்த சோதனையின் முடிவு இதுவரை தெரியாமல் இருப்பது போல, இப்பொழுதும் மத்திய அரசு செயல்படக்கூடாது. இல்லையெனில் மக்கள் மத்திய அரசின்மீதும் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #MinisterVijayabaskar #MKStalin #Ramadoss

தி.மு.க. சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியரை வைத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தடுப்பதற்கு முதலமைச்சர் துணைபோனார். ஆனால் அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால், இப்போது சி.பி.ஐ., குட்கா வழக்கில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்டவர்களை விசாரித்துள்ளது. அதில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், காவல் துறை அதிகாரிகள் மீதும், சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் ரெய்டு நடத்தியிருக்கிறது. ஆகவே குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆரம்ப கட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த சி.பி.ஐ. ரெய்டு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.