செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருடியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்

Published On 2018-09-14 09:07 GMT   |   Update On 2018-09-14 09:07 GMT
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணிகளின் உடமைகளை திருட முயற்சித்த திருடனை பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். #Robbery
சென்னை:

மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்தது.

கடைசி பெட்டிக்கு அருகில் உள்ள எஸ்.9 ரிசர்வேசன் பெட்டியில் நள்ளிரவு ஏறிய ஒரு வாலிபர் பயணிகளின் உடமைகளை திருட முயற்சித்தார். தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணியின் தலைஅடியில் இருந்த பையை எடுக்க முயன்றபோது அவர் விழித்துக் கொண்டு கூச்சல் போட்டார்.

உடனே அருகில் இருந்த பயணிகள் எழுந்து அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.

இந்த ரெயிலில் ஆர்.பி.எப். போலீசார் இல்லாததால் பயணிகளே காவலுக்கு இருந்து அந்த வாலிபரை செங்கல்பட்டு ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட வாலிபர் இதே ரெயிலில் எஸ்.5 பெட்டியில் ஏற்கனவே திருட முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஓடும் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் திருடன் கைவரிசை காட்டிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #Robbery

Tags:    

Similar News