செய்திகள்

மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2019-03-09 11:44 GMT   |   Update On 2019-03-09 11:44 GMT
வைகையில் போதுமான தண்ணீர் உள்ளதால் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju #vaigaidam

மதுரை:

மதுரை மாநகராட்சி சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானாவில் அமைக் கப்பட்ட 10 தூண் சந்து உள்ளிட்ட புராதன சின்னங்கள் அடங்கிய ரவுண்டானா 100-வது வார்டில் பூங்கா, நூலகம் ஆகியவை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் பங்கேற்று புதிய பணிகளை தொடங்கி வைத்தார். கோபாலகிருஷ்ணன் எம்.பி., மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், கிரம்மர் சுரேஷ், எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா, பைக்காரா கருப்புசாமி, முத்துவேல், பிரிட்டோ உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஜூலை மாதம் மதுரை காளவாசலில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேம்பால பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மதுரை நகரின் வரலாற்றை விளக்கும் வகையில் 5 இடங்களில் நினைவு சின்னங்கள் அமைக்கப்படும் என்றார்.

அதன்படி திண்டுக்கல் சாலை, ஆரப்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

3-வதாக தற்போது பழங்காநத்தத்தில் அமைக்கப்பட்ட 10 தூண்கள் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் தென்பகுதி என்பதால் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தென் பகுதியில் இருந்து வரும் மக்கள் பார்க்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மின் விலக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பெரியார் பஸ் நிலையத்தில் பணிகள் நடக்கின்றன. இன்னும் 48 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, அழகிய நகராக மதுரை மிளிரும்.

வைகை ஆற்றில் ராஜா மில் ரோடு பகுதியில் இருந்து குருவிக்காரன் சாலை வரை கரைகளின் இருபுறமும் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஆற்றுக்குள் விடப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் ஆற்றுக்குள் விட திட்டமிடப்பட்டுள்ளது. உயர்மட்ட மேம்பாலங்களும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வைகை அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு போதுமான தண்ணீர் உள்ளது. எனவே மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju #vaigaidam

Tags:    

Similar News