செய்திகள்
முதல்வர் பழனிசாமி

மருத்துவர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

Published On 2020-04-09 14:49 GMT   |   Update On 2020-04-09 14:49 GMT
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் காணொலிக் காட்சியில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 748 ஆக இருந்தது.

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் காணொலிக் காட்சியில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

Similar News