செய்திகள்
திருப்பூரில் வீட்டுமனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம்-வருகிற 1ந்தேதி நடக்கிறது
வருகிற 1-ந்தேதி காலை 10-30 மணி முதல் மாலை 4-30 மணி வரை மண்டல வாரியாக முகாம் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற வீட்டுமனைகள், வீட்டு மனை பிரிவுகள் வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் நடக்கிறது. வருகிற 1-ந்தேதி காலை 10-30 மணி முதல் மாலை 4-30மணி வரை மண்டல வாரியாக இதற்கான முகாம் நடக்கிறது.
வரன்முறைக்கு விண்ணப்பிக்கும் மனைக்கான பத்திர நகல், 2016-ம் ஆண்டுக்கு முந்தைய மூலப்பத்திர நகல், பட்டா, சிட்டா அடங்கல், மனைப்பிரிவு வரைபடம், வில்லங்க சான்று நகல் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வார்டு எண் 1 முதல் 15 வரையிலான பகுதிகளுக்கு அம்மன் கலையரங்கம், சிறுபூலுவப்பட்டி ரோடு, தொடர்பு அலுவலர் ஹரி-98947 44571.
வார்டு எண் 16-30, நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகம், தொடர்புக்கு-98947 47571.
வார்டு எண் 31-45, பள்ளக்காட்டு புதூர், சோளியம்மன் கோவில் மண்டபம், தொடர்புக்கு ஆறுமுகம்-98422 72494.
வார்டு எண் 46-60. எஸ்.ஆர். நகர் , ரத்தின விநாயகர் கோவில் மண்டபம், தொடர்புக்கு 86438 51051. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.