உள்ளூர் செய்திகள்
போலீசார் எடுத்த முன்எச்சரிக்கையால் 268 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் திருட்டு வழக்குகளில், 53 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 144 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 43 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பு விவரம் வருமாறு:
தொழிற்சாலை பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க தனி போலீஸ் படை உருவாக்கப்பட்டது. 3 ஆயிரத்து 632 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, அவர்கள் “முழு காலத்திற்கு” முன்பே வெளியில் செல்வது பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 483 பேர் முழு காலமும் அனுபவிக்காமல், மிக விரைவிலேயே வெளியே வந்த அவல நிலை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
ஆனால் அந்த நிலை மாற்றப்பட்டு அப்படி வெளிவரும் எண்ணிக்கையையும் இந்த அரசு குறைத்திருக்கிறது. குற்றத்தடுப்பிற்கு இது ஒரு வகை. இப்படி அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலமாக இந்த அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் திருட்டு வழக்குகளில், 53 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 144 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 43 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.
உளவுத்துறை, மாவட்டத் தனிப்பிரிவு, மாநகர நுண்ணறிவுப் பிரிவு, உள்ளூர் காவல் துறையினர் அளித்த முன்எச்சரிக்கை தகவலின் அடிப்படையில், கடந்த ஓராண்டில் 268 கொலைகள் நடைபெறாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இதுவரை நடைபெற்ற 185க்கும் மேற்பட்ட முக்கிய விழாக்களில் பங்கேற்ற 1 கோடியே 8 லட்சம் பேரின் பாதுகாப்பினை இந்த அரசு உறுதி செய்து, அவர்கள் திருவிழாக்களைக் கண்டு களித்து விட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப வித்திடப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு சில முக்கிய நிகழ்வுகளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை, இமானுவேல் சேகரன் நினைவு தினம், விநாயகர் சதுர்த்தி விழா, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ரம்ஜான் போன்ற நிகழ்வுகளின்போது இந்த ஆட்சி மிகச் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சமூக நல்லிணக்கத்தை சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டி இருக்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையும் படியுங்கள்...புயலாக வலுவிழந்தது அசானி- ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த மழை