உள்ளூர் செய்திகள்
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் தலைமையில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடந்தது.

திவ்ய நற்கருணை ஊர்வலம்

Published On 2022-06-02 09:12 GMT   |   Update On 2022-06-02 09:12 GMT
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாதாவிற்கு கிரீடம் அணியப்பட்டு தேர் பவனி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாதா குளத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் திருப்பலி மேடையில் இருந்து திவ்ய நற்கருணை பவனியாக எடுத்து வரப்பட்டு பின்னர் அங்கு உள்ள வாகனத்தின் மூலம் சிலுவை பாதை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் வைத்து மறையுறை, பக்தர்களுக்கு திவ்யநற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News