உள்ளூர் செய்திகள்

247 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

கள்ளக்குறிச்சியில் 247 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2023-03-29 10:23 GMT   |   Update On 2023-03-29 10:23 GMT
  • நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
  • சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராம்குமார், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் ஆகியோர் அடங்கிய நகராட்சி குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம் சாலை, குளத்து மேட்டு தெரு ஆகிய பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், உணவகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 129 கடைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் வரும் காலங்களில் மீண்டும் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். அப்போது தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News