உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்.

வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு குறுந்தொழில் தொடங்க 25 சதவீதம் கடன் உதவி

Published On 2023-06-09 10:18 GMT   |   Update On 2023-06-09 10:18 GMT
  • சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன் பெறலாம்.
  • பின்னா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்:

கொரோனா பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் குறுந்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மேலும் தெரிவித்தி ருப்பது:- கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து தாயகம் திரும்பிய புலம்பெயா் தமிழா்களுக்கு வாழ்வா தாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு புலம் பெயா்ந்தோா் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன் பெறலாம்

மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படும் இத்திட்ட த்துக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்து பின்னா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க லாம்.

இத்திட்டம் குறித்த மேலும் விவரங்கள் மற்றும் ஆலோ சனைகள் பெற மாவட்டத் தொழில் மையம், உழவா் சந்தை அருகில், நாஞ்சிக்கோ ட்டை சாலை, தஞ்சாவூா் என்ற முகவரி யிலுள்ள அலுவ லகத்தை நேரடியாகவோ, 04362 -255318, 257345 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News