தேனி அருகே ஜோதிடரிடம் கத்தி முனையில் 25 பவுன் நகை பறிப்பு
- ஜோதிடரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட முயன்றனர்.
- போலீசார் ஒருவரை பிடித்தனர். தப்பிஓடிய நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ள குண்டல்நாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரவிமுத்து(51). இவர் ஜோதிடராக உள்ளார். மேலும் சொந்தமாக விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று தனது ேதாட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அமர்ந்திருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவரது தோட்டத்திற்கு வந்தனர். திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரவிமுத்து அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்து க்கொண்டு ஓட முயன்றனர்.
இதனைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரவிமுத்து கூச்சலிட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். மற்ற 2 பேரும் தப்பித்துவிடவே ஒருவரை மட்டும் பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிடித்து தப்பிஓடிய நபர்கள் யார் என விசாரித்து வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.