உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்து ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.

செஞ்சி அருகே தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம்

Published On 2023-05-03 08:13 GMT   |   Update On 2023-05-03 08:13 GMT
  • தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது.

விழுப்புரம்:

வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சிதறி ஓடினார்கள். ஆனாலும் 26 பேரை தேனீக்கள் கொட்டியது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மேல்ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

Tags:    

Similar News