உள்ளூர் செய்திகள்

நாணயத்தை ஒப்படைத்த காட்சி.

புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்

Published On 2022-09-25 08:39 GMT   |   Update On 2022-09-25 08:39 GMT
  • குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்.
  • 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் வீட்டில் இருந்து வரும் காலகட்டத்தில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பந்தயப் புறாக்கள், மற்றும் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பறவைகளுக்கான கூண்டு தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறார் அதிகமான வெளிவட்டார பழக்க வழக்கங்களை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் பறவைகளோடு மகிழ்ந்து விளையாடுவது அவருக்கு வாடிக்கையாகும்

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார் இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து அந்த முழு தொகையையும் கொண்டு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் இரண்டு காரில் ஏற்றிக்கொண்டு கடைக்குச் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்

இதுகுறித்து இளைஞர் சந்தோஷ் குமார் நிருபர்களிடம் தெரிவித்த போது, பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News