உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகை, எல்.இ.டி.  டெலிவிஷன்களையும் படத்தில் காணலாம்.

விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது:16 பவுன் நகைகள் மீட்பு

Published On 2022-09-24 07:37 GMT   |   Update On 2022-09-24 07:37 GMT
  • விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அனந்தபுரம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கனூர் கிராமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி ஜெயராஜ் என்பவரின் மகன் டான்கேரேஜ் (வயது 30) என்பவர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், 2 எல்.இ.டி. டெலிவிஷன் திருடு போயிருந்தது. இது குறித்து கஞ்சனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் போலீசார் லட்சுமி நாராயணன், திருநாவுக்கரசு, செல்லப்பன், ஜெகதீசன் ஆகியோர் அனந்தபுரம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சில வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்தனர். அப்போது மேற்படி திருட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் நகைகள் மற்றும் டிவிக்களை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் அருள்ராஜ் (25), பயத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமு (24), குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவரிடமிருந்து 16 பவுன் நகைகள் மற்றும் 2 எல்.இ.டி. டெலிவிஷன்களை கைப்பற்றினர்.

Tags:    

Similar News