சின்னசேலம் பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி வாலிபர்கள் 3 பேர் கைது: வாகன சோதனையில் சிக்கினர்
- தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர்.
- இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் சின்னசேலம் போலீ சாரிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கி ளை நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர். சந்தேக மடைந்த போலீசார், 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குணசீலன் (வயது 28), மாரிமுத்து மகன் கண்ணன் (40), பொன்னுரங்கன் மகன் செந்தில் (39) என்பதும், 3 பேரும் சேர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி, சின்னசேலத் தில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் கொள்ளையடித்தது, மூங்கில் பாடியில் உள்ள செறுப்பு கடையில் பணம் திருடியது, நைனார்பாளை யத்தில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் வழிப்பறி செய்தது போன்ற சம்பவங்களில் 3 பேரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 மோட்டார் சைக்கிளையும் சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை கைது செய்த போலீசாரை சின்னசேலம் பகுதி மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.