திண்டிவனம் அருகே பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது: 2 நாட்டு துப்பாக்கி பறிமுதல்
- பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
- பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வானூர் வட்டம் உப்பு வேலூர் கிராமம் சிவன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 3 வாலிபர்களால் 20 அரியவகை பறவை கள் மற்றும் 10 உள்நாட்டு பறவைகள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பறவைகளை வேட்டையாடிய 3 வாலிகர்களை பிடித்து வனசரக அலுவலகத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் புதுவை மாநிலத்தை சேர்ந்த கௌதம், சூர்யா, சரவணன், ஆகியோர் என்பதும் இவர்கள் அறிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரி யவந்தது. உடனே போலீசார் இவர்களை வானூர் நீதிமன்ற ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வைத்திருந்த அரியவகை பறவைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்தனர்.