- சப்-இன்ஸ்பெக்டர் உத்தமசோழபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் இவர் நேற்று உத்தமசோழபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளி எதிரில் 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் அந்த 4 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 4,500 பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 48), பூலாவரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 72), உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 40), நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் வயது 60 என்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.