உள்ளூர் செய்திகள்
டி.எஸ்.பி ரோந்து பணியில் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
- போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி மனோஷ்குமார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த ரோந்து பணி இன்று காலை திருநாவலூர் பகுதியில் நடந்தது. அப்போது கெடிலம் அருகே வந்தபோது கெடிலம் ஆற்றில் 4 மாட்டுவண்டிகளுடன் மர்ம நபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். உடனே டி.எஸ்.பி தலைமையி லான போலீசார் அங்கு சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்த மணல் அள்ளும் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.